சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து இந்திய வீரர் அதிரடி ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி


சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து இந்திய வீரர் அதிரடி ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி
x

image courtsy: AFP

தினத்தந்தி 30 Aug 2024 7:43 AM IST (Updated: 30 Aug 2024 10:23 AM IST)
t-max-icont-min-icon

இவர் இந்திய அணிக்காக 6 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் இடக்கை பந்து வீச்சாளரான பரிந்தர் ஸ்ரான் (வயது 31) சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக 6 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி தலைமையில் இந்திய அணியில் அறிமுகமானார். 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மேலும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார். இருப்பினும் பல முன்னணி பவுலர்கள் இவரை விட சிறப்பாக செயல்பட்டதால் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். அதன் பின் அணியில் இடம் கிடைக்க எவ்வளவு போராடியும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்நிலையில் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 31 வயதிலேயே ஓய்வை அறிவித்த இவரது முடிவால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story