2025 ஐபிஎல் சாம்பியன் பெங்களூரு அணிக்கு தோனி வாழ்த்து


2025 ஐபிஎல் சாம்பியன் பெங்களூரு அணிக்கு தோனி வாழ்த்து
x
தினத்தந்தி 22 Jan 2026 3:19 PM IST (Updated: 22 Jan 2026 5:43 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அணி, ஐ.பி.எல். வரலாற்றில் முதல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது

சென்னை,

கடந்த 2025ல் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.

ஐ.பி.எல். அறிமுகம் ஆன 2008-ம் ஆண்டில் இருந்தே ஆடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு முதல் 17 ஆண்டுகள் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை. இதனால் அந்த அணி பல விமர்சங்களை எதிர்கொண்டது. இருப்பினும் அந்த அணிக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டே சென்றதே தவிர குறையவில்லை.

இந்நிலையில் அந்த அணியின் 18 ஆண்டு கால ஏக்கம் இந்த ஐ.பி.எல். சீசனோடு தணிந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் முதல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியை அணியின் வீரர்கள் மட்டுமின்றி பல ரசிகர்களும் வெறித்தனமாக கொண்டாடி தீர்த்தனர்.

இந்த நிலையில் பெங்களூரு அணிக்கு சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி வாழ்த்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,

பெங்களூரு அணி சிறப்பாக விளையாடியது; அவர்களின் நீண்ட காத்திருப்பு இறுதியில் முடிவுக்கு வந்தது; அவர்களுக்கு என்னுடைய மிகப்பெரிய வாழ்த்துகள்.என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story