துலீப் கோப்பை: வடக்கு மண்டல அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்... இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடம்


துலீப் கோப்பை: வடக்கு மண்டல அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்... இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடம்
x

image courtesy:PTI

அங்கித் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர்15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. இந்த போட்டியில் வடக்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்கு மண்டலங்கள் காலிறுதியில் மோதுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதியில் விளையாட உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான வடக்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், அங்கித் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அந்த அணியில் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வடக்கு மண்டல அணி விவரம் பின்வருமாறு:-

சுப்மன் கில் (கேப்டன்), அங்கித் குமார் (துணை கேப்டன்), சுபம் கஜுரியா, ஆயுஷ் பதோனி, யாஷ் துல், அங்கித் கல்சி, நிஷாந்த் சந்து, சாஹில் லோத்ரா, மயங்க் தாகர், யுத்வீர் சிங் சரக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், ஆக்கிப் நபி, கன்ஹையா வாத்வான்

1 More update

Next Story