ஆஸி.க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்

image courtesy:PTI
இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி 19-ம் தேதி நடைபெற உள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் ஆடுகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பெர்த்தில் நாளை மறுதினம் (19-ம் தேதி) நடக்கிறது.
இதையொட்டி நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து புறப்பட்ட இந்திய முன்னணி வீரர்கள் நேற்று அதிகாலை ஆஸ்திரேலியா சென்றடைந்தனர். உடனடியாக பயிற்சியையும் தொடங்கினர். சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இந்த ஒருநாள் தொடரில் ஆடுகிறார்கள். இதனால் இந்த தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டிக்காக தான் தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அறிவித்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த பிளேயிங் லெவன்:
சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்






