முதல் ஒருநாள் போட்டி: தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்


முதல் ஒருநாள் போட்டி:  தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 2 Sept 2025 2:30 AM IST (Updated: 2 Sept 2025 2:31 AM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி லீட்சில் இன்று நடக்கிறது.

லீட்ஸ்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடுகிறது.இதன்படி இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி லீட்சில் இன்று நடக்கிறது.

இவ்விரு அணிகள் இதுவரை 71 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 35-ல் தென்ஆப்பிரிக்காவும், 30-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. 5 ஆட்டங்களில் முடிவில்லை.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

தென்ஆப்பிரிக்கா: மார்க்ரம், ரையான் ரிக்கெல்டன், பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டிவால்ட் பிரேவிஸ், வியான் முல்டர், கார்பின் பாஷ் அல்லது நன்ரே பர்கர், கேஷவ் மகராஜ், ரபடா, லுங்கி இங்கிடி.

இங்கிலாந்து: ஜேமி சுமித், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சோனி பாகெர்.

இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

1 More update

Next Story