முதல் ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி


முதல் ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி
x
தினத்தந்தி 30 Aug 2025 2:15 AM IST (Updated: 30 Aug 2025 2:15 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹராரே,

ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி ஹராரே நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது . முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. பதும் நிசாங்கா (76 ரன்), ஜனித் லியானகே (70 ரன்), கமிந்து மென்டிஸ் (57 ரன்) அரைசதம் அடித்தனர்.

அடுத்து களம் இறங்கிய ஜிம்பாப்வே பென் கர்ரன் (70 ரன்), பொறுப்பு கேப்டன் சீன் வில்லியம்ஸ் (57 ரன்) மற்றும் சிகந்தர் ராசா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் இலக்கை நெருங்கியது. கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷன்கா வீசினார். அவர் முதல் 3 பந்துகளில் சிகந்தர் ராசா (92 ரன்), பிராட் இவான்ஸ் (0), ரிச்சர்ட் நரவா(0) ஆகியோரது விக்கெட்டுகளை வரிசையாக கபளீகரம் செய்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். அடுத்த 3 பந்தில் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றியை உறுதி செய்தார். 50 ஓவர்களில் ஜிம்பாப்வே 8 விக்கெட்டுக்கு 291 ரன்களே எடுத்தது. இதனால் இலங்கை அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 More update

Next Story