முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு


முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
x

image courtesy:ICC

தினத்தந்தி 10 Aug 2025 2:27 PM IST (Updated: 10 Aug 2025 2:28 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது.

டார்வின்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.

அதன்படி ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி டார்வினில் இன்று நடக்கிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

1 More update

Next Story