இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா கூறியது என்ன..?


இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா கூறியது என்ன..?
x

இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது.

கொல்கத்தா,

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி இந்தியா வந்துள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இதையொட்டி இரு அணி வீரர்களும் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த போட்டிக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா அளித்த பேட்டியில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதை விட பெரியது எதுவும் இல்லை. ஆனால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரை வசப்படுத்துவது என்பது அதற்கு அடுத்து பெரிய வெற்றியாக இருக்கும். அவர்களை நாங்கள் வென்று நீண்ட காலமாகி விட்டது. அதற்கு முடிவு கட்டுவதே எங்களது இலக்கு. இந்த தொடர் கடினமானது என்பதை அறிவோம். அவர்களிடம் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்.

அதே சமயம் எங்களது வீரர்களும் சிறந்த அணிக்கு எதிராக தங்களை சோதித்து பார்க்கும் முனைப்பில் உள்ளனர். கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை மும்பையில் சந்தித்தபோது, சில ஆலோசனைகளை கேட்டேன். அதற்கு அவர் பெரியதாக எதுவும் சொல்லவில்லை. ஆனால் டாஸ் வெல்வதை உறுதிசெய்வது முக்கியம் என்று சொன்னார். அதற்கு நான் பயிற்சி எடுத்து இருக்கிறேன்” என்று கூறினார்.

1 More update

Next Story