17 ஆண்டுகளில் முதன்முறையாக... அடிலெய்டு ஓவல் ஆடுகளத்தில் தோல்வியை தழுவிய இந்தியா

அடிலெய்டு ஓவல் ஆடுகளத்தில் நடந்த 6 ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவின் முதல் தோல்வி இதுவாகும்.
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மழையால் பாதிக்கப்பட்ட தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. இதன்படி, ஆஸ்திரேலிய அணி 46.2 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 265 ரன்களை எடுத்தது. இதனால், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற புள்ளி கணக்கில் வென்றுள்ளது.
இதனால், 17 ஆண்டுகளில் முதன்முறையாக அடிலெய்டு ஓவல் ஆடுகளத்தில் தோல்வியை இந்தியா தழுவியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கை அணி கலந்து கொண்ட காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலிய அணியிடம் 50 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.
இதன்பின்னர் 17 ஆண்டுகளுக்கு பின்னர், அடிலெய்டு ஓவல் ஆடுகளத்தில் ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது. இதேபோன்று, அடிலெய்டு ஓவல் ஆடுகளத்தில் நடந்த 6 ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவின் முதல் தோல்வி இதுவாகும்.






