இத்தாலி டி20 அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் நியமனம்


இத்தாலி டி20 அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் நியமனம்
x

image courtesy: AFP

இத்தாலி டி20 அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோம்,

ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான ஜோ பர்ன்ஸ் இத்தாலி டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 35 வயதான இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 23 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவர் ஆஸ்திரேலிய அணியில் 2014- 2020-ம் ஆண்டு கால கட்டங்களில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடியுள்ளார். அதன்பின் அணியில் இடம் கிடைக்காத நிலையில் இத்தாலிக்கு குடி பெயர்ந்து அங்கு விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில் 2026-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு இத்தாலி முன்னேறும் நோக்கில் இவரை புதிய டி20 கேப்டனாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதுவரை இத்தாலி அணிக்காக 5 இருபது ஓவர் போட்டியில் ஆடி ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 211 ரன்கள் எடுத்துள்ளார்.

1 More update

Next Story