ஐபிஎல் அணிகள் டிரேடிங்கில் வாங்கிய வீரர்கள்....முழு விவரம்


ஐபிஎல் அணிகள் டிரேடிங்கில் வாங்கிய வீரர்கள்....முழு விவரம்
x

வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது. அதன்படி எந்தெந்த அணிகள் யார் யாரை டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது என்பதை பார்ப்போம்.

*ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு சென்னை அணி வாங்கியது.

*சென்னை வீரர் ஜடேஜாவை ரூ.14 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது.

*சென்னை வீரர் சாம் கரனை ரூ.2.4 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது.

*லக்னோ வீரர் ஷர்துல் தாகூரை ரூ.2 கோடிக்கு மும்பை அணி வாங்கியது.

*குஜராத் வீரர் ஷெர்பேன் ரூதர்போர்டைரூ. 2.6 கோடிக்கு மும்பை அணி வாங்கியது.

*ஐதராபாத் வீரர் ஷமியை ரூ.10 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது.

*கொல்கத்தா வீரர் மயங்க் மார்கண்டேவை ரூ.30 லட்சத்துக்கு மும்பை அணி வாங்கியது.

*மும்பை வீரர் அர்ஜுன் தெண்டுல்கரை ரூ.30 லட்சத்துக்கு லக்னோ அணி வாங்கியது.

*ராஜஸ்தான் வீரர் நிதிஸ் ராணாவை ரூ.4.2 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.

*டெல்லி வீரர் டெனவன் பெரேராவை ரூ.1 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது.

1 More update

Next Story