உலகின் சிறந்த ஆல் ரவுண்டர்....ஜடேஜாவுக்கு கம்பீர் பாராட்டு

ஜடேஜாவுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
துபாய்.,
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் , ஜடேஜாவுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
ரவீந்திர ஜடேஜா எப்போதும் கவனிக்கப்படாமல் இருக்கிறார் என்று நான் உணர்ந்திருக்கிறேன். அவர் இந்திய கிரிக்கெட்டுக்காக என்ன செய்துள்ளார் என்பதைப் பாருங்கள். அது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் , டி20 , 50 ஓவர் போட்டியாக இருந்தாலும் சரி. அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானவர் . பேட் அல்லது பந்தில் மட்டுமல்ல, மைதானத்திலும் கூட. அவர் உலக கிரிக்கெட்டில் சுற்றித் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். எங்களுக்கு, ரவீந்திர ஜடேஜாவின் மதிப்பு தெரியும். என்று கூறினார்.






