தமிழகத்தில் குட்கா, பான் மசாலா தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு


தமிழகத்தில் குட்கா, பான் மசாலா தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 25 May 2024 5:49 PM IST (Updated: 25 May 2024 7:44 PM IST)
t-max-icont-min-icon

தடையை மீறி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகத்திற்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

2025ம் ஆண்டு மே 23ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் கடந்த 2013ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது.2013ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

தடையை மீறி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 More update

Next Story