உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்... அபிஷேக் சர்மாவை வாழ்த்திய யுவராஜ் சிங்

Image Courtesy: AFP / PTI
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
புதுடெல்லி,
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5வது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 247 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 248 ரன் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து 97 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 150 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது அபிஷேக் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய அபிஷேக் சர்மாவுக்கு இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, அபிஷேக் ஷர்மா நன்றாக விளையாடினாய். இப்படிதான் உன்னை பார்க்க விரும்புகிறேன். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






