இந்தியா - நியூசிலாந்து தொடர்... போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image courtesy:PTI
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.
புதுடெல்லி,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பு இந்த தொடர் நடைபெறுகிறது.
ஜனவரி 11-ந்தேதி இந்த போட்டி தொடர் தொடங்குகிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து மோதும் போட்டிகளுக்கான இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.
அதன்படி பரோடா, ராஜ்கோட், இந்தூர் ஆகிய இடங்களில் ஒருநாள் போட்டிகளும், நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் டி20 ஆட்டங்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






