இந்தியா- இந்தியா 'ஏ' அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்

அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ‘ஏ’ அணியுடன் மோதுகிறது.
பெக்கேன்ஹாம்,
இங்கிலாந்து சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடருக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணி, ஏற்கனவே அங்கு சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ஆடிய அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய 'ஏ' அணியுடன் மோதுகிறது.
இந்த 4 நாள் பயிற்சி ஆட்டம் பெக்கேன்ஹாமில் உள்ள கென்ட் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. உள்ளூர் சூழலுக்கு தகுந்தபடி தங்களை தகவமைத்துக் கொள்ள இந்த ஆட்டத்தை இந்திய அணி வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story






