இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கடைசி டெஸ்ட்: டெல்லியில் இன்று தொடக்கம்

டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது
புதுடெல்லி,
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆமதாபாத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
டெல்லி மைதானம் இந்தியாவுக்கு ராசியானது. 1987-ம் ஆண்டு நவம்பருக்கு பிறகு இந்திய அணி இங்கு தோற்றதில்லை. அதாவது கடந்த 38 ஆண்டுகளில் இங்கு நடந்த 13 டெஸ்டுகளில் இந்தியா 11-ல் வெற்றியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது.
காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






