சர்வதேச டி20 கிரிக்கெட்: 86 இன்னிங்ஸ்.. 150 சிக்சர்.. சூர்யகுமார் யாதவ் மாபெரும் சாதனை

image courtesy:BCCI
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் இந்த சாதனையை படைத்தார்.
கான்பெர்ரா,
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் கான்பெர்ராவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்தபோது மறுபடியும் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழை கொட்டியதால் அத்துடன் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். அப்போது சூர்யகுமார் யாதவ் 39 ரன்களுடனும் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்மன் கில் 37 ரன்களுடனும் (20 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.
இந்த ஆட்டத்தில் அடித்த 2 சிக்சர்களையும் சேர்த்து சர்வதேச டி20 போட்டியில் சூர்யகுமாரின் சிக்சர் எண்ணிக்கை 150-ஆக உயர்ந்தது. இந்த மைல்கல்லை தனது 86-வது இன்னிங்சில் அவர் எட்டியுள்ளார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக இந்த மைகல்லை (150 சிக்சர்கள்) எட்டிய 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் முகமது வாசீம் (66 இன்னிங்ஸ்கள்) முதலிடத்தில் உள்ளார்.
அத்துடன் 150 சிக்சர்கள் மைல்கல்லை எட்டிய 2-வது இந்திய வீரர் என்ற சிறப்பையும் சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார். இதில் ரோகித் சர்மா 205 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.






