சர்வதேச டி20: எம்.ஐ.எமிரேட்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி


சர்வதேச டி20: எம்.ஐ.எமிரேட்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
x

2-வது தகுதி சுற்றில் எம்.ஐ.எமிரேட்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

ஷார்ஜா,

6 அணிகள் இடையிலான 4-வது சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ஷார்ஜாவில் நடந்த இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் எம்.ஐ.எமிரேட்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி, எம்.ஐ.எமிரேட்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக அலிஷன் ஷராபு 50 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் 121 ரன்கள் இலக்குடன் ஆடிய எம்.ஐ.எமிரேட்ஸ் அணி 16.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. டாம் பான்டன் 64 ரன்னும், ஷகில் அல்-ஹசன் 38 ரன்னும் எடுத்தனர்.

1 More update

Next Story