ஐபிஎல் 2025: மும்பைக்கு எதிராக சென்னை பந்துவீச்சு தேர்வு


ஐபிஎல் 2025: மும்பைக்கு எதிராக சென்னை பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்நடைபெறும் போட்டியில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது

1 More update

Next Story