ஐ.பி.எல்.: மினி ஏலத்திற்கு முன்பே டெல்லி அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்


ஐ.பி.எல்.: மினி ஏலத்திற்கு முன்பே டெல்லி அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்
x

image courtesy:PTI

தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்துள்ளார்.

புதுடெல்லி,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் ரசல், பதிரானா, மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் போன்ற நட்சத்திர வீரர்களை அணி நிர்வாகங்கள் விடுவித்துள்ளன. இவர்கள் ஏலத்தில் இடம்பெற உள்ளனர். மினி ஏலத்தில் இவர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மினி ஏலத்திற்கு முன்பே டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் தேர்வு செய்து அறிவித்துள்ளார். அவரது அணியில் கே.எல்.ராகுல் மற்றும் அபிஷேக் போரலை தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்துள்ளார். அத்துடன் தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்துள்ளார்.

இர்பான் பதான் தேர்வு செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

கே.எல். ராகுல், அபிஷேக் போரல், கருண் நாயர், நிதிஷ் ராணா, அக்சர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், டி நடராஜன் அல்லது சமீர் ரிஸ்வி (இம்பேக்ட் பிளேயர்)

1 More update

Next Story