ஐபிஎல்: ரஹானே அரைசதம்...பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா


ஐபிஎல்: ரஹானே அரைசதம்...பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா
x
தினத்தந்தி 22 March 2025 9:16 PM IST (Updated: 22 March 2025 9:38 PM IST)
t-max-icont-min-icon

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது

கொல்கத்தா,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்கியது. கடந்த 2008-ம் ஆண்டு பி.சி.சி.ஐ. சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18-வது ஆண்டாக வீறுநடை போடுகிறது. இந்த நிலையில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதல் நாளான இன்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக சுனில் நரைன், டி காக் களமிறங்கினர் தொடக்கத்தில் டி காக் 4 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ரஹானே சிறப்பாக விளையாடினார் ரஹானே சுனில் நரைன் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். ரஹானே அரைசதம் அடித்து 56 ரன்களில் வெளியேறினார். நரைன் 44 ரன்களில் வெளியேறினார் தொடர்ந்து ரிங்கு சிங் 12 ரன்கள் , ரசல் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8விக்கெட் இழப்பிற்கு 174ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் குருனால் பாண்டியா 3விக்கெட் வீழ்த்தினார் தொடர்ந்து 175 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடுகிறது

1 More update

Next Story