ஐ.பி.எல்.: குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு


ஐ.பி.எல்.: குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு
x

Image Courtesy: @IPL / @rajasthanroyals / @gujarat_titans

இன்று நடக்கும் ஆட்டத்தில் ராஜாதான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.

ஜெய்ப்பூர்,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற உள்ள ஆட்டத்தில் ராஜாதான் - குஜராத் அணிகள் மோத உள்ளன. முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி, 7-ல் தோல்வி என 4 புள்ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது.

குஜராத் அணி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று வலுவான நிலையில் காணப்படுகிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் குஜராத் 58 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அந்த ஆதிக்கத்தை நீட்டிக்கும் வேட்கையுடன் ஆயத்தமாகிறது.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

1 More update

Next Story