ஐ.பி.எல்.: மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்


ஐ.பி.எல்.: மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்
x

image courtesy: PTI

நடப்பு ஐ.பி.எல். சீசனில் ராஜஸ்தான் அணியின் முதல் 3 போட்டிகளுக்கான கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டார்.

ஜெய்ப்பூர்,

18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை இரவு 7.30 மணிக்கு சண்டிகரில் நடைபெற உள்ள 18-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சீசனில் 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ள ராஜஸ்தான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. அந்த அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக சஞ்சு சாம்சன் மீண்டும் கேப்டனாக களமிறங்க உள்ளார்.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது பந்து தாக்கியதில் சஞ்சு சாம்சனுக்கு வலதுகை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. காயத்துக்கு ஆபரேசன் செய்ததுடன், ஒரு மாதத்திற்கு மேலாக ஓய்வில் இருந்தார்.

ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக காயத்தில் இருந்து ஓரளவு மீண்டாலும் விக்கெட் கீப்பிங்குக்கு அவர் தயாராகவில்லை. அதனால் நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணியின் முதல் 3 ஆட்டங்களில் அவர் 'இம்பேக்ட்' வீரராக மட்டுமே ஆடினார். கேப்டன் பொறுப்பை ரியான் பராக்கும், விக்கெட் கீப்பிங் பணியை துருவ் ஜூரெலும் கவனித்தனர்.

இந்நிலையில் தற்போது காயத்தில் இருந்து முழுமையாக மீண்ட சஞ்சு சாம்சன் பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இருந்து மீண்டும் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் களமிறங்க உள்ளார்.

1 More update

Next Story