தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர் - அயர்லாந்து அணி அறிவிப்பு

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆட உள்ளது.
image courtesy: ICC
image courtesy: ICC
Published on

டப்ளின்,

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் டிசம்பர் 5ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடக்கின்றன.

இந்நிலையில், இந்த தொடர்களுக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் கேபி லூயிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்து டி20 அணி விவரம்: கேபி லூயிஸ் (கேப்டன்), அவா கேனிங், கிறிஸ்டினா கூல்டர் ரெய்லி, அலானா டால்செல், லாரா டெலானி, ஆமி ஹண்டர், ஆர்லீன் கெல்லி, லூயிஸ் லிட்டில், ஐமி மாகுயர், ஜேன் மாகுயர், லாரா மெக்பிரைட், காரா முர்ரே, லியா பால், ஓர்லா பிரெண்டர்காஸ்ட், ரெபேக்கா ஸ்டோக்கல்.

அயர்லாந்து ஒருநாள் அணி விவரம்: கேபி லூயிஸ் (கேப்டன்), அவா கேனிங், கிறிஸ்டினா கூல்டர் ரெய்லி, லாரா டெலானி, ஜார்ஜினா டெம்ப்சே, சாரா போர்ப்ஸ், ஆமி ஹண்டர், ஆர்லீன் கெல்லி, ஐமி மாகுயர், ஜேன் மாகுயர், லாரா மெக்பிரைட், காரா முர்ரே, லியா பால், ஓர்லா பிரெண்டர்காஸ்ட், ரெபேக்கா ஸ்டோக்கல்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com