எனது கணவரை தவிர அணியில் உள்ள மற்ற அனைவரும் தீய செயல்களில்... - ஜடேஜாவின் மனைவி சர்ச்சை கருத்து


எனது கணவரை தவிர அணியில் உள்ள மற்ற அனைவரும் தீய செயல்களில்... - ஜடேஜாவின் மனைவி சர்ச்சை கருத்து
x

image courtesy:PTI

ஜடேஜாவின் மனைவி குஜராத்தில் மந்திரியாக உள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இவரின் மனைவி, ரிவாபா ஜடேஜா. இவர், தற்போது குஜராத்தில் மந்திரியாக உள்ளார்.

இந்நிலையில் தனது கணவரின் ஒழுக்கத்தை குறிப்பிட்டு பேசுகையில் பிற இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து அவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய ரிவாபா, “எனது கணவர் ரவீந்திர ஜடேஜா, கிரிக்கெட் விளையாட லண்டன், துபாய், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. ஆனாலும் இன்றுவரை, அவர் தனது பொறுப்புகளைப் புரிந்துகொண்டதால், எந்தவிதமான தீய செயல்களிலும் ஈடுபட்டதில்லை.

அதேநேரத்தில், அணியில் உள்ள மற்ற அனைவரும் தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து எந்த தடையும் இல்லை. நாம் வாழ்க்கையில் முன்னேறியவுடன் நமது கலாசார வேர்களை நினைவில் கொள்வதும் முக்கியம்” என்று கூறினார்.

அவருடைய இந்த கருத்து பலரது மத்தியில் பேசு பொருளாகி உள்ளது.

1 More update

Next Story