டெஸ்டில் ஜோ ரூட் 18 ஆயிரம் ரன்கள் குவிப்பார் - இங்கிலாந்து முன்னாள் வீரர் கணிப்பு


டெஸ்டில் ஜோ ரூட் 18 ஆயிரம் ரன்கள் குவிப்பார் - இங்கிலாந்து முன்னாள் வீரர் கணிப்பு
x

Image Courtesy: @ICC

தினத்தந்தி 8 Aug 2025 7:30 AM IST (Updated: 8 Aug 2025 7:31 AM IST)
t-max-icont-min-icon

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (200 டெஸ்டில் 15,921 ரன்) முதலிடத்தில் உள்ளார்.

புதுடெல்லி,

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (200 டெஸ்டில் 15,921 ரன்) முதலிடத்தில் உள்ளார். அவரை விட 2,378 ரன் பின்தங்கியுள்ள இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்துள்ளார்.

இந்த நிலையில் ஜோ ரூட், தெண்டுல்கரை சீக்கிரம் முந்தி விடுவார் என இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ரூட், தெண்டுல்கரின் சாதனையை நிச்சயம் முறியடிப்பது மட்டுமின்றி, அதையும் தாண்டி நிறைய ரன்கள் குவிப்பார்.

இப்போது அவருக்கு 34 வயதாகிறது. எப்படியும் இன்னும் 6 ஆண்டுகள் விளையாடுவார். அனேகமாக மேலும் 4 ஆயிரம், 5 ஆயிரம் ரன்கள் எடுப்பார். 40 வயது வரை ஜோ ரூட் விளையாடும் போது டெஸ்டில் 18 ஆயிரம் ரன்கள் எடுத்து இருப்பார் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story