ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தான் அணிக்கு 241 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

ஆரோ ஜார்ஜ் அரைசதமடித்து 85 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்
ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தான் அணிக்கு 241 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
Published on

துபாய்,

19 வயதுக்குட்பட்டோருக்கான 12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், பி பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்காளதேசம், நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடியது. இந்திய அணியில் ஆயுஷ் மாத்ரே , ஆரோன் ஜார்ஜ் , கான்ஷிக் சவுகான் ஆகியோர் சிறப்பாக விளையாடினர் ஆயுஷ் மாத்ரே 38 ரன்களும், கான்ஷிக் சவுகான் 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆரோ ஜார்ஜ் அரைசதமடித்து 85 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து 241 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com