ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸி. அணி அறிவிப்பு.. 2 இந்திய வம்சாவளியினருக்கு இடம்

இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸி. அணி அறிவிப்பு.. 2 இந்திய வம்சாவளியினருக்கு இடம்
Published on

சிட்னி,

16-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி முதல் பிப்ரவரி 6-ந்தேதி வரை ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் 5 முறை சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா சி பிரிவில் அங்கம் வகிக்கிறது. அயர்லாந்து, ஜப்பான், இலங்கை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலிவர் பீக் தலைமயிலான அந்த அணியில் ஆர்யன் சர்மா மற்றும் ஜான் ஜேம்ஸ் ஆகிய இரு இந்திய வம்சாவளி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இவர்களில் ஆர்யன் ஆல்ரவுண்டர் ஆவார். இவரது பெற்றோர் பஞ்சாப் மாநிலம் சண்டிகாரை சேர்ந்தவர்கள். 2005-ம் ஆஸ்திரேலியாவில் குடியேறினர். ஆர்யன் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில்தான். ஜான் ஜேம்ஸ் வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ஆவார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் வயநாடு ஆகும்.

ஆஸ்திரேலிய அணி வருமாறு:- ஆலிவர் பீக் (கேப்டன்), கேசி பார்டன், நடேன் கூரே, ஜெய்டன் டிராப்பர், பென் கார்டன், ஸ்டீவன் ஹோகன், தாமஸ் ஹோகன், ஜான் ஜேம்ஸ், சார்லஸ் லச்முன்ட், வில் மலாஜ்சுக், நிதேஷ் சாமுவேல், ஹைடன் ஷில்லர், ஆர்யன் சர்மா, வில்லியம் டெய்லர், அலெக்ஸ் லீ யங்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com