கேரளா கிரிக்கெட் லீக்: அதிக தொகைக்கு ஏலம் போன சஞ்சு சாம்சன்.. எவ்வளவு தெரியுமா..?


கேரளா கிரிக்கெட் லீக்: அதிக தொகைக்கு ஏலம் போன சஞ்சு சாம்சன்.. எவ்வளவு தெரியுமா..?
x

image courtesy:PTI

கேரளா கிரிக்கெட் லீக் தொடரின் 2-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.

கொச்சி,

கேரளா கிரிக்கெட் லீக் (20 ஓவர்) தொடரின் 2-வது சீசன் ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஏரிஸ் கொல்லம் சைலர்ஸ், திருவனந்தபுரம் ராயல்ஸ், ஆலப்பி ரிப்பிள்ஸ், காலிகட் குளோப்ஸ்டார்ஸ், கொச்சி புளூ டைகர்ஸ் மற்றும் திருச்சூர் டைட்டன்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் இந்த 2-வது சீசனுக்கான வீரர்களின் ஏலம் இன்று நடைபெற்றது. இதில் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை ரூ. 26.8 லட்சத்திற்கு கொச்சி புளூ டைகர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இதன் மூலம் கேரளா கிரிக்கெட் லீக் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

1 More update

Next Story