கடைசி ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அணி 222 ரன்களுக்கு ஆட்டமிழப்பு


கடைசி ஒருநாள் போட்டி:  இங்கிலாந்து அணி 222 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
x

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

வெல்லிங்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என இங்கிலாந்து கைப்பற்றியது. தொடர்ந்து நடந்து வரும் ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளின் முடிவில் 2-0 என நியூசிலாந்து தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சேல் சாண்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த்து .

தொடக்கத்தில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் ஜேமி ஓவர்டன், ஜோஸ் பட்லர் , கார்ஸ் மட்டும் நிலைத்து ஆடினர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர் .

ஜேமி ஓவர்டன் சிறப்பாக விளையாடி 68 ரன்கள் எடுத்தார். ஜோஸ் பட்லர் 38 ரன்களும் , கார்ஸ் 36 எடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது . நியூசிலாந்து சார்பில் டிக்னர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் .தொடர்ந்து 223 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது .

1 More update

Next Story