தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20: பும்ரா ஆடுவாரா..?


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20: பும்ரா ஆடுவாரா..?
x

image courtesy: BCCI

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

ஆமதாபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கட்டாக், தர்மசாலா ஆட்டங்களில் இந்தியாவும், சண்டிகாரில் நடந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. லக்னோவில் நடக்க இருந்த 4-வது போட்டி கடுமையான பனிமூட்டத்தால் ரத்து செய்யப்பட்டது. இதனால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாட உள்ளது.

இதனிடையே இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? என்ற கேள்வி நிலவுகிறது. ஏனெனில் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த 2 ஆட்டங்களில் இருந்து விலகினார். இதன் காரணமாக அவர் ஆடுவரா - இல்லையா? என்பதில் சந்தேகம் நிலவியது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியுடன் இணைந்து விட்டார். இதன் காரணமாக அவர் இந்த போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story