கடைசி டி20 போட்டி: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

இந்தியா - தென் ஆப்பிரிக்கா டி20 தொடரின் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.
ஆமதாபாத்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கட்டாக், தர்மசாலா ஆட்டங்களில் இந்தியாவும், சண்டிகாரில் நடந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. லக்னோவில் நடக்க இருந்த 4-வது 20 ஓவர் போட்டி கடுமையான பனிமூட்டத்தால் ‘டாஸ்’ கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.






