உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா

Image Courtesy: X (Twitter) / File Image
2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
பர்மிங்காம்,
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ரவுண்ட்-ராபின் வடிவத்தில் நடைபெறும். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
மழை காரணமாக இந்த ஆட்டம் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 79 ரன் எடுத்தது. தொடர்ந்து டி.எல்.எஸ். முறைப்படி 81 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 11 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 80 ரன் எடுத்தது.
இதன் காரணமாக ஆட்டம் டிரா ஆனது. தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்க பவுல்ட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.






