லக்னோவுக்கு எதிரான ஆட்டம்: சென்னை அணியில் அஸ்வினுக்கு இடமில்லை


லக்னோவுக்கு எதிரான ஆட்டம்: சென்னை அணியில் அஸ்வினுக்கு இடமில்லை
x

image courtesy:PTI

லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

லக்னோ,

ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி லக்னோ முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இருந்து தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஷேக் ரஷீத் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் கான்வேக்கு பதிலாக ஜேமி ஓவர்டனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். லக்னோ அணியில் ஒரே மாற்றமாக ஹிம்மத் சிங்கிற்கு பதிலாக மிட்செல் மார்ஷ் இடம்பெற்றுள்ளார்.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஜேமி ஓவர்டன், எம்எஸ் தோனி (கேப்டன்), அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரனா

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, ரிஷப் பண்ட் (கேப்டன்), டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாகூர், அவேஷ் கான், ஆகாஷ் தீப், திக்வேஷ் ரதி

1 More update

Next Story