ஒருநாள் போட்டி தரவரிசை: ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த மிட்செல்


ஒருநாள் போட்டி தரவரிசை: ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த மிட்செல்
x

இந்தியாவின் ரோகித் சர்மா 2-வது இடத்துக்கு சரிந்தார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் இரு இடங்கள் முன்னேறி முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம் 36 புள்ளிகள் கூடுதலாக சேகரித்த அவர் மொத்தம் 782 புள்ளிகளுடன் நம்பர் 1 ஆக உயர்ந்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் உச்சபட்ச இடத்தை அலங்கரித்த 2-வது நியூசிலாந்து வீரர் ஆவார். இதற்கு முன்பு கிளென் டர்னர் 1979-ம் ஆண்டில் முதலிடத்தில் இருந்துள்ளார்.

இதனால் மூன்று வாரத்துக்கு முன்பு நம்பர் 1 அரியணையில் ஏறிய இந்தியாவின் ரோகித் சர்மா (781 புள்ளி) 2-வது இடத்துக்கு சரிந்தார். சுப்மன் கில் 4-வது இடத்திலும், விராட் கோலி 5-வது இடத்திலும் தொடருகிறார்கள். பாகிஸ்தானின் பாபர் அசாம் ஒரு இடம் அதிகரித்து 6-வது இடம் வகிக்கிறார். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றமில்லை. ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் முதலிடத்தில் உள்ளார்.


1 More update

Next Story