நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் டேரைல் மிட்செல் 6 ஆயிரம் ரன்கள் குவிப்பு

நியூசிலாந்துக்காக அனைத்து நிலைகளிலும் அதிகபட்ச ரன் எடுத்தவராக கனே வில்லியம்சன் இருக்கிறார்.
நெல்சன்,
நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் டேரைல் மிட்செல் சர்வதேச போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார். நியூசிலாந்து நாட்டின் நெல்சன் நகரில் இன்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது சர்வதேச டி20 போட்டியில் 24 பந்துகளில் 41 ரன்களை சேர்த்தபோது, இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதில், 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். இதனால், 176 சர்வதேச போட்டிகளில் விளையாடி, மிட்செல் 6,032 ரன்களை எடுத்துள்ளார். 183 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 11 சதங்களும், 34 அரை சதங்களும் எடுத்துள்ளார்.
88 சர்வதேச டி20 போட்டிகளில் 1,674 ரன்களை அவர் எடுத்திருக்கிறார். நியூசிலாந்துக்காக அனைத்து நிலைகளிலும் அதிகபட்ச ரன் எடுத்தவராக கனே வில்லியம்சன் இருக்கிறார். 373 போட்டிகளில் விளையாடி 19,107 ரன்களை அவர் குவித்திருக்கிறார். 443 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 48 சதங்களும் மற்றும் 102 அரை சதங்களும் அடித்துள்ளார். அவருடைய சிறந்த ஸ்கோர் 251 ஆக உள்ளது.






