தென் ஆப்பிரிக்கா ஏ-க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய ஏ அணி அறிவிப்பு


தென் ஆப்பிரிக்கா ஏ-க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய ஏ அணி அறிவிப்பு
x

image courtesy:PTI

இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ முதல் ஒருநாள் போட்டி வருகிற 13-ம் தேதி நடைபெற உள்ளது.

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க ஏ கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ இடையிலான முதல் ஒருநாள் போட்டி 13-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய ‘ஏ’அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திலக் வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ‘ஏ’ அணி வருமாறு:-

திலக் வர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், இஷான் கிஷன், ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகம், மனவ் சுதார், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, பிரப்சிம்ரன் சிங்.

1 More update

Next Story