தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் சரிவை சந்தித்த இந்தியா

Image Courtesy: @BCCI
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.
லாகூர்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 93 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 20ம் தேதி தொடங்குகிறது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா (100 சதவீதம்) முதல் இடத்தில் தொடருகிறது. பாகிஸ்தான் (100 சதவீதம்) 2வது இடத்திற்கு வந்துள்ளது.
இதன் காரணமாக இலங்கை (66.67 சதவீதம்),இந்தியா (61.90 சதவீதம்), இங்கிலாந்து (43.33 சதவீதம்), வங்காளதேசம் (16.67 சதவீதம்) அணிகள் தலா ஒரு இடம் சரிந்து 3 முதல் 6 இடங்களில் உள்ளன. 7 மற்றும் 8வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா (0 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (0 சதவீதம்) அணிகள் உள்ளன.






