இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்.. மொஷின் நக்வியின் பதிவு வைரல்

ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
image courtesy:twitter/@ACCMedia1
image courtesy:twitter/@ACCMedia1
Published on

தோஹா,

வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை டி20 போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 13.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.

இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்திய நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஷின் நக்வி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த இளம் பாகிஸ்தான் அணியை பாராட்டி பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

மொஷின் நக்வி தனது எக்ஸ் பக்கத்தில், பாகிஸ்தானுக்கும் அதன் கிரிக்கெட் வாரியத்திற்கும் இன்று என்ன ஒரு பெருமையான தருணம்! எங்கள் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி 13.2 ஓவர்களில் இலக்கை துரத்தி, இந்தியா ஏ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது தோஹாவில் நடந்த ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் அச்சமற்ற மற்றும் மறக்க முடியாத செயல்திறன். நமது இளம் வீரர்கள் அற்புதமாக விளையாடினார்கள் - பாகிஸ்தானின் எதிர்காலம் பிரகாசமாக ஜொலிக்கிறது. தேசத்திற்கு வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com