பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்: ஏப்ரல் 11-ந் தேதி தொடக்கம்


பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்:  ஏப்ரல் 11-ந் தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 1 March 2025 2:15 AM IST (Updated: 1 March 2025 2:16 AM IST)
t-max-icont-min-icon

இதற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

லாகூர்,

6 அணிகள் பங்கேற்கும் 10-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 18-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

ராவல்பிண்டியில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இஸ்லாமாபாத் யுனைடெட், லாகூர் குலான்டர்சை சந்திக்கிறது. இறுதிப்போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. மொத்தம் 34 ஆட்டங்களில் ராவல்பிண்டியில் 11 ஆட்டமும், லாகூரில் 13 ஆட்டமும், கராச்சி, முல்தானில் தலா 5 ஆட்டமும் நடக்கிறது.

1 More update

Next Story