ஐ.பி.எல். தொடருடன் போட்டி போடும் பாகிஸ்தான் சூப்பர் லீக்

ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி தொடங்க உள்ளது.
சென்னை,
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போன்று பல நாடுகளில் உள்ளூர் டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரின் 11-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச்.26-ம் தேதி முதல் மே.3-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் 19-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.
அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பி.சி.சி.ஐ. உடன் போட்டி போடும் நோக்கில் ஐ.பி.எல். நடைபெறும் சமயத்தில் பிஎஸ்எல் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. இருப்பினும் உலக அரங்கில் பிஎஸ்எல் தொடரை காட்டிலும் ஐ.பி.எல். உச்சத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 2-வது ஆண்டாக ஐ.பி.எல். சமயத்தில் பி.எஸ்.எல். தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.






