ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகம் அல்ல: அஸ்வின்


ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகம் அல்ல: அஸ்வின்
x

ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகம் அல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்

துபாய்.,

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் எல்லை பிரச்சினை காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்ட காலம் பிரச்சினை இருந்து வருவதால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. இதனால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறும் என்று ஐ.சி.சி. அறிவித்தது. இதற்கு அனைத்து அணிகளும் சம்மதம் தெரிவித்தன. துபாயில் இதுவரை நடந்துள்ள 4 ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இறுதிப்போட்டியும் இதே மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதனால் இந்திய அணி ஒரே மைதானத்தில் ஆடுவது கூடுதல் சாதகமாக இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் , ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகம் அல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நமது கேப்டன், பயிற்சியாளர்கள் ஆகியோரை பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரே மைதானத்தில் விளையாடுவது பற்றி கேட்ட கேள்விகளை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது . 2009 சாம்பியன்ஸ் டிராபியில், தென் ஆப்பிரிக்கா அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடியது, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. இந்தியா தரமான கிரிக்கெட்டை விளையாடியுள்ளது, சிறந்த செயல்திறன் காரணமாக இறுதிப் போட்டியை எட்டியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வோம். கடைசியாக கொரோனா காலத்தில் இந்தியா துபாயில் விளையாடியது. என தெரிவித்தார்.

1 More update

Next Story