புரோ கபடி: மும்பையை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய புனே அணி

image courtesy:twitter/@ProKabaddi
12-வது புரோ கபடி லீக் தொடர் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
ஜெய்ப்பூர்,
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் தொடர் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 40-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி யு மும்பாவை எதிர்கொண்டது.
இதில் சிறப்பாக ஆடிய புனே அணி 40-22 என்ற புள்ளி கணக்கில் யு மும்பாவை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றதுடன், புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.
இதில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் புனேரி பால்டன்- அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8 மணி), தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
Related Tags :
Next Story






