கோலி, பும்ரா, ஸ்டோக்ஸ் குறித்த கேள்வி.. ஒற்றை வார்த்தையில் பதிலளித்த கம்மின்ஸ்

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கம்மின்சிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
கோலி, பும்ரா, ஸ்டோக்ஸ் குறித்த கேள்வி.. ஒற்றை வார்த்தையில் பதிலளித்த கம்மின்ஸ்
Published on

பெர்த்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் தற்போது முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். காயத்திலிருந்து வேகமாக குணமடைந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கம்மின்சிடம் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஸ்டோக்ஸ் குறித்து ஒரே வார்த்தையில் விவரிக்கவும் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கம்மின்ஸ், விராட் கோலியை பேட்ஸ்மேன் என்றும் ஜஸ்பிரித் பும்ராவை பவுலர் என்றும் ஸ்டோக்சை வீரர் என்றும் கூறினார்.

நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் விராட் கோலி, நம்பர் 1 பவுலராக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சிறந்த ஆல் ரவுண்டரான ஸ்டோக்ஸ் ஆகியோரை வெறும் பேட்ஸ்மேன், பவுலர், வீரர் என கம்மின்ஸ் குறிப்பிட்டுள்ளது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com