மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு..? - வெளியான தகவல்


மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு..? - வெளியான தகவல்
x

image courtesy: @BCCIWomen

மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

நவிமும்பை,

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும். இந்நிலையில், இந்த போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகளிர் உலக கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் நவி மும்பையில் இன்று மழை பெய்ய 63 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மழையால் தடைபட்டால் ஆட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்படும். நாளையும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு 50 ஓவர் உலக கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story