ரஞ்சி கோப்பை காலிறுதி: தமிழக அணி அறிவிப்பு

image courtesy: twitter/@TNCACricket
காலிறுதியில் தமிழக அணி விதர்பாவை எதிர்கொள்கிறது.
சென்னை,
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப் 2' இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
அதன்படி சவுராஷ்டிரா, குஜராத், அரியானா, மும்பை, விதர்பா, தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. காலிறுதி சுற்று ஆட்டங்கள் வருகிற 8-ம் தேதி தொடங்குகின்றன. இதில் தமிழக அணி விதர்பாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்நிலையில் இந்த காலிறுதி ஆட்டத்திற்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சாய் கிஷோர் தலைமையிலான அந்த அணியில் குடலிறக்க பாதிப்புக்காக கடந்த டிசம்பரில் லண்டனில் ஆபரேசன் செய்து கொண்ட சாய் சுதர்சன் குணமடைந்து விட்டதால், அணிக்கு திரும்பியுள்ளார்.
தமிழக அணி வருமாறு: சாய் கிஷோர் (கேப்டன்), என்.ஜெகதீசன் (துணை கேப்டன்), முகமது அலி, சாய் சுதர்சன், பூபதி வைஷ்ணகுமார், விஜய் சங்கர், ஆந்த்ரே சித்தார்த், பிரதோஷ் ரஞ்சன் பால், முகமது, அஜித் ராம், சோனு யாதவ், திரிலோக் நாக், அச்யுத், லோகேஷ்வர், எம்.சித்தார்த், கோவிந்த்.