ரஞ்சி கோப்பை 2025: ஷர்துல் தாக்கூர் தலைமையில் மும்பை அணி அறிவிப்பு

Image Courtesy: @BCCIdomestic
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் மும்பை அணியின் கேப்டனாக ஷர்தூல் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை,
இந்த சீசனுக்கான (2025-26) ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷர்துல் தாக்கூர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து அஜிங்கியா ரஹானே விலகிய நிலையில், அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க முடிவு செய்தத்தை அடுத்து, தற்போது ஷர்தூல் தாக்கூர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை ரஞ்சி அணி: ஷர்துல் தாக்கூர் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, ஆகாஷ் ஆனந்த், ஹர்திக் தாமோர், சித்தேஷ் லாட், அஜிங்கியா ரஹானே, சர்பராஸ் கான், ஷிவம் துபே, ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியான், துஷார் தேஷ்பாண்டே, சில்வெஸ்டர் டிசோசா, இர்பான் உமைர், முஷீர் கான், அகில் ஹெர்வாட்கர், ராய்ஸ்டன் டயஸ்.






