ரஞ்சி கோப்பை: காலிறுதிக்கு முன்னேறிய அணிகள் எவை..?


ரஞ்சி கோப்பை: காலிறுதிக்கு முன்னேறிய அணிகள் எவை..?
x

கோப்புப்படம்

தினத்தந்தி 3 Feb 2025 6:28 AM IST (Updated: 3 Feb 2025 9:52 AM IST)
t-max-icont-min-icon

காலிறுதி ஆட்டங்கள் வருகிற 8-ந்தேதி தொடங்குகின்றன.

மும்பை,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப் 2' இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். இதன் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன.

லீக் சுற்று முடிவில் சவுராஷ்டிரா, குஜராத், அரியானா, மும்பை, விதர்பா, தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

காலிறுதி சுற்று ஆட்டங்கள் வருகிற 8-ம் தேதி தொடங்குகின்றன. இதில் ஜம்மு-காஷ்மீர்-கேரளா, விதர்பா- தமிழ்நாடு , அரியானா- மும்பை மற்றும் சவுராஷ்டிரா- குஜராத் ஆகிய அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story