ஆல் டைம் சிறந்த 5 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த ரிக்கி பாண்டிங்... 2 இந்திய வீரர்களுக்கு இடம்

image courtesy:PTI
ரிக்கி பாண்டிங் தேர்வு செய்தவர்களில் விராட், ரோகித் இடம்பெறவில்லை.
சிட்னி,
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்து விளங்கிய 5 ஆல் டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்தவர்களில் நவீன கிரிக்கெட்டில் அசத்திய விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஸ்டீவ் சுமித் ஆகியோர் இடம்பெறவில்லை. அத்துடன் ஒரு ஆஸ்திரேலிய வீரரை கூட அவர் அந்த பட்டியலில் சேர்க்கவில்லை.
ஆனால் அந்த பட்டியலில் 2 இந்திய வீரர்களை அவர் தேர்வு செய்துள்ளார்.
ரிக்கி பாண்டிங் தேர்வு செய்த 5 ஆல் டைம் சிறந்த 5 பேட்ஸ்மேன்கள் :-
1. பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்)
2. சச்சின் தெண்டுல்கர் (இந்தியா)
3. ராகுல் டிராவிட் (இந்தியா)
4. ஜோ ரூட் (இங்கிலாந்து)
5. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)
இது தொடர்பாக பாண்டிங் பேசுகையில், “நான் எதிர்கொண்டு விளையாடியதிலேயே பிரையன் லாரா மிகவும் திறன் மிகுந்த பேட்ஸ்மேன். நான் பார்த்ததிலேயே டெக்னிக்கல் அளவில் சச்சின் தெண்டுல்கர் மிகவும் சிறந்தவர். அதே போல ராகுல் டிராவிட். அவர்களுடன் தற்போது நான் ஜோ ரூட்டையும், வில்லியம்சனையும் சேர்ப்பேன்” என்று கூறினார்.






